உலக அதிசயம் இருக்கும் நகரின் பெயரை மாற்றும் பாஜக அரசு

உலக அதிசயம் இருக்கும் நகரின் பெயரை மாற்றும் பாஜக அரசு

உலகின் 7 அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் இருக்கும் ஆக்ரா நகரத்தின் பெயரை உத்தர பிரதேச மாநில மாற்ற முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாஜ்மகால் அமைந்துள்ள நகரமான ஆக்ரா, வரலாற்று காலத்தில் ஆக்ராவன் என்ற பெயரில் அழைக்கப்பட்டதால் ஆக்ராவன் என்றே அந்த நகரத்திற்கு புதிய பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என்றும் கூறப்படுகிரது

இந்நிலையில், ஆக்ராவின் வரலாற்று பெயர் குறித்த தகவல்களை தருமாறு அம்பேத்கர் பல்கலைக்கழகத்தை உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோரியுள்ளார்.

வரலாற்றில் ஆக்ராவன் என அழைக்கப்பட்டதற்கு ஆதாரங்கள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் அப்பெயரே ஆக்ராவுக்கு சூட்டப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அம்மாநிலத்தில், அலகாபாத் பிரக்யாராஜ் எனவும் பைசாபாத் அயோத்யா எனவும் முகல்சாராய் ரயில்வே நிலையம் தீன் தயால் உபத்யாயா நகர் எனவும் ஏற்கெனவே பெயர்மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply