உலகை அழிப்பது கிம், வியாபாரிகளை அழிப்பது மோடி: சர்ச்சை போஸ்டரால் பரபரப்பு

உலகை அழிப்பது கிம், வியாபாரிகளை அழிப்பது மோடி: சர்ச்சை போஸ்டரால் பரபரப்பு


கிம் உலகை அழிக்க முடிவு செய்துவிட்டார்; பிரதமர் மோடி வியாபாரிகளை அழிக்க முடிவெடுத்து விட்டார்’ என்ற போஸ்டர் உபி மாநிலத்தின் கான்பூரில் உள்ள பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் உ.பி மாநிலத்தின் வங்கிகள் வியாபாரிகளிடமிருந்து சில்லறைகளைப் பெற்றுக்கொள்வதில்லை என்று புகார் கான்பூர் வியாபாரிகள் மத்தியில் எழுந்துள்ளது.

இதுகுறித்து பல்வேறு அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை இல்லை என்ற நிலையில், அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக போராட்டங்கள் நடத்த முடிவு செய்த வியாபாரிகள் வியாபாரிகள் முதல்கட்டமாக மேற்கண்ட வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

இதன் காரணமாக போஸ்டர்களில் இடம்பெற்றிருந்த 22 வியாபாரிகள் மீது கான்பூரின் கோவிந்த் நகர் காவல்நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply