உலகின் மிகப் பழமையான மொழி தமிழ்: சென்னையில் பிரதமர் மோடி பேச்சு

உலகின் மிகப் பழமையான மொழி தமிழ்: சென்னையில் பிரதமர் மோடி பேச்சு

உலகின் மிகப் பழமையான மொழி தமிழ் என்றும், பழமையான மொழியான தமிழை போற்றுவோம் என்றும் சென்னையில் நடைபெற்ற ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேசினார்.

மேலும் நாட்டின் மிக உயர்ந்த கல்வி நிறுவனமாக ஐஐடி திகழ்கிறது என்றும், எதிர்கால இந்தியாவின் கனவுகளை உங்கள் கண்களில் பார்க்கிறேன் என்று மாணவர்களை பார்த்து கூறிய பிரதமர் மோடி, இந்திய இளைஞர்களின் திறமைக்கு பின்னால் ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்கள் உள்ளன என்றும் தெரிவித்தார்

மேலும் இந்தியாவின் இளைய தலைமுறையினரின் நம்பிக்கையை கண்டு உலகத் தலைவர்கள் வியப்பு கொள்வதாகவும், இந்தியர்களின் முயற்சி, உழைப்பு, தன்னம்பிக்கை கொண்டு உலகமே வியக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் சிறந்த மாணவர்களாக மட்டுமல்லாமல் சிறந்த குடிமக்களாகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published.