உலகக்கோப்பை ஹாக்கி: இந்தியா-பெல்ஜியம் போட்டி டிரா

உலகக்கோப்பை ஹாக்கி: இந்தியா-பெல்ஜியம் போட்டி டிரா

ஒடிசாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா-பெல்ஜியம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டம் 2-2 என்ற கோல்கணக்கில் டிரா ஆனது.

போட்டி தொடங்கியதில் இருந்தே இரு அணிகளும் தடுப்பு ஆட்டத்தை மேற்கொண்டதால் கோல் போட இரு அணி வீரர்களும் தடுமாறினர். இருப்பினும் பெல்ஜியம் அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் கோலாக மாறியதால் 1-0 என்ற கணக்கில் பெல்ஜியம் முன்னிலை பெற்றது. ஆனால் இதற்கு பதிலடியாக இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் ஒரு கோல் போட்டு சமன்படுத்தினார்

பின்னர் இரண்டாம் பாதியில் பெல்ஜியம் ஒரு கோல் போட்டு முன்னணியில் இருந்தாலும் ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் இந்தியா ஒரு கோல் போட்டு போட்டியை டிரா செய்தது. ஏற்கனவே தன்னாப்பிரிக்கா அணியுடன் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளதால் தற்போது இந்திய அணி ‘சி’ பிரிவு புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது

Leave a Reply