உலகக்கோப்பை வெற்றிக்கு இணையானது: இம்ரான்கான் பேட்டி

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு இன்று பாகிஸ்தான் திரும்பினார். இஸ்லாமாபாத் விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இந்த அமெரிக்க பயணம் தனக்கு உலகக்கோப்பையை வென்றது போல் உள்ளது’ என்று தெரிவித்தார்.

வாஷிங்டனுடன் ஏற்பட்ட முறிந்த உறவுகளை மீட்க இம்ரான்கான் சமீபத்தில் அமெரிக்க சுற்றுப்பயணம் சென்றார், அங்கு அதிபர் ட்ரம்ப் மற்றும் அமைச்சர் மைக் பாம்பியோ ஆகியோரை சந்தித்தார். இந்த சந்திப்புகள் பயனுள்ளதாக இருந்ததாகவும், இந்த சந்திப்பு தனக்கு உலகக்கோப்பையை வென்ற சந்தோஷத்தை கொடுத்ததாகவும் கூறினார்.

இந்த நிலையில் இம்ரான்கான் அவர் பதவியேற்று ஓராண்டு நிறைவு தினமும் கொண்டாடப்படுவதால் விமான நிலையத்தில் அவர் கட்சித் தொண்டர்கள் இம்ரான் கானை வாழ்த்தி கோஷமிட்டனர்.

Leave a Reply