உலகக்கோப்பை கிரிக்கெட்: இலங்கை கொடுத்த இலக்கை 16 ஓவர்களில் முடித்த நியூசிலாந்து

இன்றைய உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இலங்கை அணி கொடுத்த 137 என்ற இலக்கை 16.1 ஓவர்களில் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 29.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. கருனரத்னே 52 ரன்களும், பெரரே 29 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்தின் ஹெண்ரி மற்றும் ஃபெர்குசன் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இந்த நிலையில் 137 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 16.1 ஓவர்களில் 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. குப்தில் 73 ரன்களும், முண்ரோ 58 ரன்களும் எடுத்தனர், ஹெண்ரி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply