உலகக்கோப்பை கிரிக்கெட்: முதல் போட்டியில் புதிய சாதனை படைத்த இம்ரான் தாஹிர்

இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில், தென்னாப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் புது உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார்.

இன்றைய போட்டியில் இங்கிலாந்து- தென் ஆப்ரிக்கா அணிகள் மோதி வரும் நிலையில் ‘டாஸ்’ வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டுபிளசி முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் ஜோடி துவக்கம் அளித்தது. இதன் முதல் ஓவரை தென்னாப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் வீசினார். இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் முதல் ஓவரை வீசிய முதல் சுழற்பந்துவீச்சாளர் என்ற வரலாறு படைத்தார் இம்ரான் தாஹிர்

மேலும் முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே பெயர்ஸ்டோ விக்கெட்டையும் இம்ரான் தாஹிர் வீழ்த்தியுள்ளார்.

Leave a Reply