உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியர்கள் கேன்சல் செய்த டிக்கெட்டுக்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியர்கள் கேன்சல் செய்த டிக்கெட்டுக்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறாததால் ஏற்கனவே விற்கப்பட்டிருந்த சுமார் 30 ஆயிரம் டிக்கெட்டுக்கள் கேன்சல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்று கணித்து இந்தியர்கள் பலர் இந்த போட்டியை நேரில் கண்டு ரசிக்க ஏராளமான டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் அரையிறுதி போட்டியில் இந்திய அணி எதிர்பாராத விதத்தில் தோல்வி அடைந்ததால் அதிர்ச்சி அடைந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், இறுதிப்போட்டிக்கு வாங்கியிருந்த டிக்கெட்டுக்களை கேன்சல் செய்து வருகின்றனர்.

இதுவரை சுமார் 30 ஆயிரம் டிக்கெட்டுக்கள் கேன்சலாகியிருப்பதாக தெரிகிறது. ஆனால் நேற்று நடைபெற்று 2வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதால் இங்கிலாந்து ரசிகர்கள் முண்டியடித்து டிக்கெட்டுக்களை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply