உயிருக்கு போராடிய சுபஸ்ரீயை காப்பாற்ற போராடும் இளைஞர்கள்: திக் திக் கடைசி நிமிடங்கள்

உயிருக்கு போராடிய சுபஸ்ரீயை காப்பாற்ற போராடும் இளைஞர்கள்: திக் திக் கடைசி நிமிடங்கள்

நேற்று குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் பள்ளிக்கரணை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அதிமுகவின் பேனர் ஒன்று விழுந்தததால் பின்னால் வந்த லாரி ஏறியதால் பரிதாபமாக பலியானார். இந்த விபத்தில் கடைசி சில நிமிடங்கள் உயிருக்கு சுபஸ்ரீ போராடியதும், அவரை காப்பாற்ற சில இளைஞர்கள் செய்த முயற்சியும் வீடியோ ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்தின்போது ரத்த வெள்ளத்தில் மிதந்த சுபஸ்ரீயை காப்பாற்ற சில இளைஞர்கள் முயற்சித்தனர். அவர்கள் சாலையில் செல்லும் பல வாகனங்களில் உதவி கேட்டனர். ஆம்புலன்ஸ் 15 நிமிடங்கள் வரை வராததால் வேறு வழியின்றி சுபஸ்ரீயை நாலைந்து இளைஞர்கள் தூக்கி கொண்டே சென்றனர். அப்போது அந்த வழியான வந்த வேன் ஒன்று சுபஸ்ரீயை ஏற்றி கொள்ள சம்மதித்ததை அடுத்து அவர் வேனில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

இதுபோன்ற விபத்து நேரங்களில் பாதிக்கப்பட்டவருக்கு யோசிக்காமல் உதவ வேண்டும் என்ற மனநிலை இன்னும் நம் மக்களிடம் வரவில்லை. மேலும் ஒரு உயிரை காப்பாற்றும் ஆம்புலன்ஸ் எவ்வளவு சீக்கிரம் சம்பவ இடத்திற்கு வரவேண்டும் என்பதும் அதிமுக்கியம் என்பது இந்த விபத்தின் மூலம் தெரிய வருகிறது

Leave a Reply