உமா மகேஸ்வரி உடலுக்கு திமுக தலைவர் அஞ்சலி

உமா மகேஸ்வரி உடலுக்கு திமுக தலைவர் அஞ்சலி

நெல்லையில் நேற்று படுகொலை செய்யப்பட்ட முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உடலுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் நேற்று வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவருடன் அவருடைய கணவர் மற்றும் பணிப்பெண்ணும் கொலை செய்யப்பட்டனர்

மகேஸ்வரி வீட்டில் நடந்த இந்த கொலை அம்மாநகரையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உமா மகேஸ்வரி வீட்டில் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தால் இந்த கொலை திருட்டுக்காக செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

இருப்பினும் சொத்து பிரச்சனை காரணமாகவும் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் உமா மகேஸ்வரியின் கொலைக்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் மேலும் விரைவில் கொலையாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் அவர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.