உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும்: ப.சிதம்பரத்திற்கு பாஜக பதிலடி

உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும்: ப.சிதம்பரத்திற்கு பாஜக பதிலடி

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்தியநிதியமைச்சர் ப.சிதம்பரம், தான் கைது செய்யப்பட்டது குறித்து டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது சார்பில் தனது குடும்பத்தினர் டுவீட் செய்திருப்பதாக விளக்கம் அளித்த ப.சிதம்பரம், ‘இந்த வழக்கில் அதிகாரிகள் யாரும் கைது செய்யப்படவில்லையே என மக்கள் கேட்பதாகவும், எந்த ஒரு அதிகாரியும் தவறும் செய்யவில்லையா? என்றும், அதிகாரிகள் கைது செய்யப்பட வேண்டும் என விரும்பவும் இல்லை என்றும், கடைசியாக கையெழுதிட்டதால்தான் கைது செய்யப்பட்டேனா? என மக்கள் கேள்வி எழுப்பியதாகவும் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

ப.சிதம்பரத்தின் இந்த டுவீட்டுக்கு தமிழக பாஜகவின் டுவிட்டர் பக்கம் பதிலடி கொடுத்துள்ளது. அதில், ‘மற்ற திருடர்கள் வெளியே இருக்கும் பொழுது என்னை மட்டும் ஏன் பிடித்து உள்ளே வைத்திருக்கிறீர்கள்” என்று கேட்பது போல் உள்ளது. நீங்கள் நல்லவர் என்றால் உங்கள் மகன் கார்த்தி சிதம்பரம் கம்பெனிக்கு பணம் கைமாற்ற உதவிய அனைத்து அதிகாரிகளையும் அடையாளம் காட்ட வேண்டும். உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும்” என்று குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.