உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் செய்ய தடை: தேர்தல் ஆணையம் அதிரடி

உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதிக்கும் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

யோகி ஆதித்யநாத், மாயாவதி ஆகிய இருவரும் தேர்தல் விதிகளை மீறியதாக கூறி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஒரு மாநில முதல்வர் மற்றும் ஒரு மாநிலத்தின் முக்கிய கட்சியின் தலைவர் மீதே தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 

Leave a Reply