உதயநிதியின் ‘சகோதரி’ டுவீட்டும், நெட்டிசன்களின் பதிலடியும்

புதுச்சேரியை சேர்ந்த ரபிஹா என்ற மாணவி நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின்போது புர்காவை அகற்ற மறுத்து தனக்கு கிடைக்க வேண்டிய தங்கப்பதக்கத்தை பெறாமல் வெளியேறினார் என்று செய்தி வெளிவந்தது.

இதுகுறித்து திமுக இளைஞரணி செயலாளர் தனது டுவிட்டரில், ‘அரசியல் சாசனத்திலிருந்து ‘மதச்சார்பின்மை’யை வெளியேற்ற வேண்டும் என நினைப்பவர்களே பட்டமளிப்பு விழா அரங்கிலிருந்து சகோதரி ரபிஹாவை வெளியேற்றியுள்ளனர். இதற்கு, தன் கல்வியால் பெற்ற தங்கப் பதக்கத்தைப் பெறமறுத்து தன் எதிர்ப்பை பதிவுசெய்துள்ளார் ரபிஹா. உன் குரல் ஓங்கிஒலிக்கட்டும் சகோதரி! என்று பதிவு செய்துள்ளார்.

உதயநிதியின் இந்த டுவீட்டிற்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்துள்ளனர். புர்காவை அகற்ற மறுத்து அந்த மாணவி வெளியேறினார் என்ற செய்தி வெளியாகியிருக்கும்போது சகோதரி ரபிஹாவை வெளியேற்றியுள்ளனர் என்று டுவீட் போட்டு உதயநிதி வழக்கம்போல் பிரச்சனையை பெரிதாக்குவதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *