உண்மையில் என்ன நடந்தது? பேருந்தை எதிர்த்து நின்ற இளம்பெண் பேட்டி!

உண்மையில் என்ன நடந்தது? பேருந்தை எதிர்த்து நின்ற இளம்பெண் பேட்டி!

கடந்த இரண்டு நாட்களாக தவறான வழிப்பாதையில் வந்த பேருந்து ஒன்றை இளம்பெண் ஒருவர் எதிர்த்து நின்றதும் அதனை அடுத்து அந்தப் பேருந்து சரியான பாதைக்குத் திரும்பியதுமான வீடியோ ஒன்று வைரலாகி வந்தது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த நிகழ்வு குறித்து உண்மையில் என்ன நடந்தது என்ற ஒரு ஆச்சரியமான தகவலை அந்த பெண் தெரிவித்துள்ளார். அந்த பெண்ணின் பெயர் சூர்யா மானிஷ். கேரளாவை சேர்ந்தவர் சூர்யா மானிஷ், இந்த சம்பவம் குறித்து கூறியதாவது:

உண்மையில் அந்த வீடியோவில் உள்ள காட்சிகள் கடைசியாக நடந்தது மட்டுமே இருந்தது. நான் அந்த பேருந்து ஓட்டுனருக்கு எதிராக எந்தவித சவால் விட்டபடியும் அங்கு நிற்கவில்லை. அந்த நிமிடம் எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தான் நின்றேன்

இதற்கு முன்னால் அந்தப் பேருந்துக்கு முன்பாகவே ஒரு பள்ளி பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பள்ளி பேருந்து திடீரென இடதுபுறம் சென்று நின்றது. இதனைத் தொடர்ந்து அந்தப் பள்ளி பேருந்து திரும்பிய பிறகு நான் சென்று கொண்டிருந்த சாலைப் பகுதியில் எதிரே அரசுப் பேருந்து ஒன்று மற்றொரு வாகனத்தை முந்திக் கொண்டு வந்தது

அந்த நேரத்தில் எதிரே ஒரு அரசு பேருந்து மற்றொரு வாகனத்தை முந்திக் கொண்டு வந்தது இந்த பேருந்தை பார்த்தவுடன் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆகவே நான் பயந்து எதுவும் தெரியாமல் நின்றேன். ஆனால் பேருந்து ஓட்டுநர் சாமர்த்தியமாக தனது பேருந்தை திருப்பி எனது பயத்தை குறைத்தார். இதுதான் உண்மையில் நடந்தது

ஆனால் நான் ஏதோ அந்த பேருந்தை எதிர்த்து தைரியமாக நின்றதாக சமூக வலைதளங்களில் இது இட்டுக்கட்டப்பட்டுள்ளது உண்மையில் அந்த பேருந்து டிரைவருக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும் என்று தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published.