உணவகங்களின் உரிமையை ரத்து செய்வோம்: அமைச்சர் ஜெயகுமார் எச்சரிக்கை

உணவகங்களின் உரிமையை ரத்து செய்வோம்: அமைச்சர் ஜெயகுமார் எச்சரிக்கை

ஜிஎஸ்டி வரியை குறைத்துவிட்டு அதற்கு ஈடாக உணவுப்பொருட்களின் விலையை உணவகங்கள் உயர்த்தினால், உணவகங்களின் உரிமையை ரத்து செய்யவும் தயங்க மாட்டோம் என்று அமைச்சர் ஜெயகுமார் எச்சரித்துள்ளார்.

ஜிஎஸ்டி வரி உணவகங்களுக்கு 18%ல் இருந்து 5%ஆக கடந்த வாரம் குறைக்கப்பட்டது. ஆனால் ஒருசில உணவகங்கள் ஜிஎஸ்டி வரியை குறைத்துவிட்டு அதற்கு ஈடாக உணவு பொருட்களின் விலையை உயர்த்திவிட்டதாக சமூக வலைத்தளங்களில் ஆதாரத்துடன் கூடிய புகைப்படங்கள் வெளிவந்தன.

இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயகுமார் ‘ஜி.எஸ்.டி வரிக்குறைப்பின் பலன் மக்களுக்குக் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக அமைக்கப்பட்டுள்ள மத்திய அரசின் கண்காணிப்புக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடம்பெறுவர். விலைக்குறைப்புகுறித்து உணவகச் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி வரியைக் குறைத்தும் விலையைக் குறைக்காத உணவகங்கள்மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது. அந்த உணவகங்களின் உரிமம் ரத்துசெய்யப்படும்’ என்றார்.

Leave a Reply