உடலுறவு செய்தபோது திடீர் மரணம்: காப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

உடலுறவு செய்தபோது திடீர் மரணம்: காப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

அலுவலக வேலையாக வெளியூர் சென்றிருந்த ஒருவர் ஓட்டலில் தங்கியிருந்தபோது முன்பின் தெரியாத ஒரு பெண்ணுடன் உடலுறவு செய்த போது மாரடைப்பால் மரணம் அடைந்தார். அந்த நபருக்கு அலுவலகம் இழப்பீடு தரவேண்டும் என்றும் இன்ஷூரன்ஸ் நிறுவனமும் இழப்பீடு தர வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரீஸ் பகுதியைச் சேர்ந்த ஒரு அலுவலர் தனது அலுவலகத்தின் பணிக்காக வெளியூர் சென்றார். பணிகளை முடித்துவிட்டு அவர் ஹோட்டலில் தங்கியிருந்த போது ஒரு பெண்ணுடன் உறவு கொண்டதாக தெரிகிறது. அவ்வாறு உறவு கொண்டு இருக்கும் போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்

இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அலுவலக வேலையாக வெளியூர் சென்றிருக்கும் தனது கணவர் வீடு திரும்பும் வரை அலுவலகம் தான் பொறுப்பேற்க வேண்டும். எனவே அலுவலக வேலையாக சென்றிருக்கும் போது அவர் மரணம் அடைந்ததால் அலுவலகம் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் இன்சுரன்ஸ் நிறுவனமும் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்தார்

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் அலுவலக வேலையாக வெளியூர் சென்ற நபர் எந்த காரணத்திற்காக மரணம் அடைந்திருந்தாலும், அதற்க்கு முழு பொறுப்பு அலுவலகம் தான் ஏற்க வேண்டும் என்று கூறி உரிய நஷ்ட ஈடு தர உத்தரவிட்டது. அதேபோல் இன்சூரன்ஸ் நிறுவனம் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply