உடனே வீடு வாங்குங்கள்: வீட்டுக்கடன் வட்டிவிகிதம் திடீர் குறைப்பு:

உடனே வீடு வாங்குங்கள்: வீட்டுக்கடன் வட்டிவிகிதம் திடீர் குறைப்பு:

இதர வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியக் காலக்கடன் தொகைக்கான குறைந்தபட்ச வட்டி எனப்படும் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதால் வர்த்தக வங்கிகளும் வீடு, வாகனம் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்து அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெப்போ வட்டி விகிதம் தற்போது 5.40% இருந்து வரும் நிலையில் இனி 5.15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 5வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. தொடர்ந்து 5 முறைகளில் இதுவரை 1.35% அளவுக்கு ரெப்போ வட்டி விகிதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

Leave a Reply