shadow

உச்சநீதி மன்றம் தீர்ப்பை மறுஆய்வு செய்யவேண்டும்: சபரிமலை விவகாரம் குறித்து தமிழிசை

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் அதிரடி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை அடுத்து கடந்த சில நாட்களாக ஐயப்பன் கோவிலுக்கு செல்ல ஒருசில பெண்கள் ஆர்வம் காட்டினர்

ஆனால் சில போராட்டக்காரர்கள் பெண்களை சபரிமலைக்குள் அனுமதிக்க முடியாது என்று கூறி ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று கவிதா, பாத்திமா ஆகிய இரண்டு பெண்கள் சபரிமலையில் உள்ள சன்னிதானம் அருகே சென்றபோது திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறியதாவது: சமூக ஆர்வலர் போன்ற பெண்கள்தான் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயற்சித்தனர். இவ்வாறு நடந்து கொள்வது, நிஜமான பக்தர்களை அவமானப்படுத்தும் போக்கு. சமூகத்தையும், சம்பிரதாயங்களையும் புரிந்துகொள்ளும் நீதிமன்றங்கள் இல்லை என்று தெரிவித்தார்.

இந்த கருத்தை ஆமோதித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தனது டுவிட்டரில் கூறியதாவது: பக்தியை சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாது.உச்சநீதி மன்றம் தீர்ப்பை மறுஆய்வு செய்யவேண்டும் சமூக சம்பிரதாயங்களை புரிந்து கொள்ளும் நிலையில் நீதிமன்றங்கள் இல்லை ….துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அவர்களின் கருத்து.சரியான கருத்து

Leave a Reply