உச்சக்கட்ட போராட்டம்: நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள்

உச்சக்கட்ட போராட்டம்: நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள்

ஹாங்காங்கில் கடந்த சில நாட்களாக ஒப்படைப்பு சட்டத்திற்கு எதிராக, போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில் அந்த போராட்டத்தின் உச்சகட்டமாக போராட்டக்காரர்கள் அனைவரும் ஒன்று கூடி, நாடாளுமன்றத்தை, சூறையாடியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஹாங்காங்கைச் சேர்ந்தவர்கள் பிற நாடுகளுக்குச் சென்று குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டால், அவர்களை அந்த நாடுகளிடம் ஒப்படைக்க வகை செய்யும் ஒப்படைப்பு சட்டம் கொண்டு வரப்படும் என ஹாங்காங் அரசு சமீபத்தில் அறிவித்து அதற்கான மசோதாவையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது

இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு, பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கடந்த சில நாட்களாக பெரும் போராட்டம் அங்கு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply