உங்கள் சொத்தின் மதிப்பை இரட்டிப்பாக்குவது எப்படி?

உங்கள் சொத்தின் மதிப்பை இரட்டிப்பாக்குவது எப்படி?

வீடு வாங்குவது என்பது கனவு மட்டுமல்ல. அது உணர்ச்சிகள் நிரம்பியது. பல நினைவுகளை சுமந்து நம்முடன் பயணித்த வீட்டை விற்க முடிவெடுப்பது கடினமானது என்றாலும் அந்த தருணத்தில் சரியான விற்பனை யுத்திகளை தேர்ந்தெடுப்பதில் கவனம் கொள்ள வேண்டும். மார்க்கெடிங் துறையில் பயன்படுத்தப்படும் யுத்திகளை போல் உங்கள் வீட்டின் தனித்தன்மையை முன்னெடுத்து அதற்கேற்றார் போல் விற்பனையை திட்டமிடுதல் வேண்டும்.

உங்கள் வீட்டின் மதிப்பை இரட்டிப்பாக்க உதவும் பத்து அம்சங்களை இங்கே பட்டியலிடுகிறோம். இதை அறிந்து கொள்வதின் மூலம் உங்களின் சொத்திற்கு சரியான விலையை நிர்யணிக்க முடியும்.

மூலையின் அமைந்திருக்கும் வீடுகள்

ஒரே தெருவில் உள்ள வீடுகளில், மூலை வீடுகளுக்கு மட்டும் மதிப்பு கூடுதலாக இருக்கும். உங்களது வீடு மூலை வீடு எனில், அதிக வெளிச்சம், தனிமை காக்கும் சூழ்நிலை, காற்று ஆகிய வசதிகளை வலியுறுத்தி அதற்கேற்றார் போல விலையை நிர்ணயிக்கலாம்.

போதுமான சூரிய ஒளி

வீட்டினுள் போதுமான சூரிய ஒளி என்றுமே நல்லது. ஒளி நிறைந்த வீடு பிராகசமானதாக உள்ளதோடு விசாலமானதாகவும் தெரியும். இதனாலேயே, ஒளி நிறைந்த வீடுகள் அழகியலில் நாட்டம் உள்ளவர்களின் கண்களை கவர்வதாக அமையும்.

வாஸ்து முறைப்படி

வீடு வாங்க நினைக்கும் பலரும் வாஸ்து முறைப்படி உள்ளதா என்பதில் ஆர்வம் காட்டுவார்கள். உங்கள் வீடு அப்படி அமைந்திருந்தால், விற்பனை இன்னும் சுலபமாக முடியும் வாய்ப்புகள் அதிகம். வாஸ்து முறைப்படி அமைந்துள்ளதா என்பதை தெரிந்த கொள்ள நிபுணர்களை அணுகுவதோடு, முடிந்தால் சிறு சிறு மாற்றங்களை செய்யலாம்.

எந்த ஃப்ளோரில் உள்ளது

நீங்கள் எந்த நகரத்தில் எந்த ஏரியாவில் உள்ளீர்கள் என்பதை பொருத்து, விற்பனை விலை அமையும். ஐதராபாத் போன்ற நகரங்களில் மாடி கூட கூட , வீட்டின் மதிப்பும் அதிகரிக்கும், இதுவே பெங்களூரு நகரில் ஏரியாவை பொருத்து மாறுபடலாம். ஆகவே அதற்கேற்றார் போல விலை நிர்ணயிக்க வேண்டும்.

உயர் மாடியில் உங்கள் வீடு அமைந்திருந்தால், சூரிய ஒளி, சுத்தமான காற்று, வியூ ஆகியவற்றை மேற்கோள் காட்டலாம்.

வசதிகள்

மற்றொரு முக்கிய அம்சம் வசதிகள். உங்களின் வீடு அமைந்துள்ள இடத்தில் நீச்சல் குளம், பாதுக்காப்பு, க்ளப் போன்ற வசதிகளை வலியுறுத்தலாம்

பார்கிங் வசதி

குடியிருப்பில் பார்கிங் வசதி பெரிய வரப் பிரசாதம். உங்கள் குடியிருப்பு வீட்டை விற்கும் பொழுது, கட்டணம் இல்லா பார்கிங் வசதி பற்றி வலியுறுத்தலாம்.

அமைந்துள்ள இடம்

அமைதியான இடமோ அல்லது நெடுஞ்சாலையோ, சுற்றி இயற்கை எழிலோ அல்லது குடியிருப்புகளோ, உங்கள் வீடு அமைந்துள்ள இடம் பற்றிய தகவலை எவ்வாறு முன்னிறுத்த வேண்டும் என்று அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அந்த இடத்தில் வசிப்பதில் உள்ள சாதகங்களை பறைசாற்ற வேண்டும்.

பாதுகாப்பு

இடத்தை பறைசாற்றுவது ஒரு புறம் இருந்தாலும், உங்கள் வீடு சற்றே உள்ளடங்கி இருந்தாலோ, திருட்டு போன்ற பயம் இருக்கும் என்றால் அதற்கான தீர்வு பற்றி முடிந்த அளவு தீர்வு கண்ட பின், விற்பனை முயற்சியை மேற்கொள்வது சிறந்தது. உங்கள் வீட்டின் பாதுகாப்பிற்கு தேவையான அம்சங்களை மேற்கொள்வது நல்லது.

அதிவேக சாலை, நெடுஞ்சாலை, மெட்ரோ இணைப்பு

முன்பே கூறியது போல், உங்கள் வீடு அமைந்துள்ள இடத்தை பற்றி, அதன் சிறப்பம்சம் பற்றி வலியுறுத்துவது அவசியம். நகரத்தின் பிற இடங்களுக்கு சுலபமாக செல்லும் இணைப்பு பற்றி வலியுறுத்துங்கள்.

பில்டரின் நற்பெயர் பற்றி

பில்டரின் நற்பெயர் விற்பனையில் முக்கிய பங்கு வகிக்கிறது. பெருநகரங்களில் வீடு வாங்கும் பொழுது பில்டரின் மதிப்புக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும். நற்பெயருள்ள பில்டரால் கட்டப்பட்ட வீடுகளை எளிமையாக விற்க இயலும்.

மேலே கூறப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும் வழிகாட்டுதலே, உங்கள் வீட்டின் முக்கிய அம்சங்களை அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல உங்களின் விற்பனை யுக்திகளை அமைத்துக் கொள்ள வேண்டும். நேர்த்தியாக கையாளப்படும் விற்பனை யுக்திகள், சுலபமான, லாபகரமான விற்பனைக்கு வழி வகுக்கும்.

Leave a Reply