shadow

உங்களின் இன்றைய நாளை அழகாக்கவிருக்கும் விஷயங்கள் இவைதான்!

1இன்று போனால், நாளை ஒரு நாள் கிடைக்கும். ஆனால், போன அந்த ஒருநாள் மீண்டும் திரும்ப கிடைக்கவே கிடைக்காது. வாழ்க்கை என்பதே இந்த நாட்களால் ஆனதுதானே! அப்படி நமக்கு கிடைக்கும் நாளை நாம் எப்படியெல்லாம் செலவழிக்க வேண்டும்? கொஞ்சம் ப்ரிப்பேர் பண்ணிக்கலாமே ப்ரோ.
1) உங்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்:

நீங்க நல்லா காஃபி போடுவீங்களா? செஞ்சு குடிங்க. இசை பிடிக்குமா? கேளுங்க. மனசுக்கு பிடிச்சத செய்ற ஆட்கள் தான் அதிகம் வெற்றி பெற்றதா புள்ளி விவரம்லாம் சொல்லுது பாஸ். அது கவிதை எழுதறதோ இல்ல கால மடக்கி யோகா செய்றதோ.. தினமும் காலைல உங்களுக்கு பிடிச்ச ஒண்ண செஞ்சிடுங்க.

2) நல்லா சாப்பிடணும்:
உடம்புக்கு நல்லதுன்னு காலைல பிடிக்காம ஓட்ஸ் சாப்பிடுறதும், சாப்பிடாம இருக்கிறதும் வேஸ்ட். சாப்பாடுன்றது உடம்புக்கு மட்டுமில்லை. மனசுக்கும்தான். அதிகம் டேமேஜ் பண்ணாத, அதே சமயம் உங்கள குஷியாக்குறத கொஞ்சம் சாப்பிடுங்க. அது தர்ற எனர்ஜி 2 மணி நேரம்ன்னா, சந்தோஷம் நாள் முழுக்க இருக்கும்

3) கோல் செட் பண்ணுங்க:

கோல்ன்னா உடனே கலெக்டர் ஆகணும், கண் தானம் பண்ணனும்னு சீரியஸாவே யோசிக்க வேணாம். பக்கத்து சீட்டு ஆள சிரிக்க வைக்கிறது, வாங்கின புத்தகம் ஒண்ண படிச்சு முடிகிறது, புதுசா ஒரு விஷயம் கத்துக்கறதுன்னு சின்னச் சின்ன சிம்பிளான விஷயங்களா கூட இருக்கலாம். பண்ண முடியாத கோல் செட் பண்றதுக்கு நாம சும்மாவே இருந்திடலாமே!

4) சந்தோஷத்த ஷேர் பண்ணுங்க:

ரோடுல கால வச்சாலே டிராஃபிக்காதான் இருக்கும். அதுக்கு முன்னாடி கொஞ்சம் மகிழ்ச்சிய ஷேர் பண்ணிட்டு போனா எவ்ளோ நல்லா இருக்கும்? வாட்ஸ்அப்ல வதந்திதான் வரணும்னு இல்ல. வாழ்த்துகள சொல்லலாம். ட்விட்டர்ல ட்ரோல்தான் பண்ணனும்னு இல்ல. டிரிப்யூட்டும் பண்ணலாம். தினமும் காலைல யாராவது ஒருத்தருக்கு ஒரு ‘வாவ்’ மொமெண்ட் கொடுத்து பாருங்க. உங்க நாளே வாரே வாவா இருக்கும்.

5) ஆர்கனைஸ் பண்ணுங்க..மனசுக்குள்ள:

அடுக்கி வச்ச ஷெல்ஃப்லதான ஈசியா வேண்டியத தேடி எடுக்க முடியும்? மனசும் ஒரு ஷெல்ஃப் தான் பாஸ். பெட்ல படுத்தபடியே, அந்த நாள்ல நடக்க இருக்கிற விஷயங்கள கொஞ்சம் அசை போடுங்க. முந்தின நாள் முடிஞ்சத டெலீட் பண்ணுங்க. புது விஷயங்கள எண்டர் பண்ணுங்க. சிஸ்டத்த கொஞ்சம் ரெகுலரைஸ் பண்ணுங்க. அப்புறம் பாருங்க ஆண்ட்ராய்டு ஃபோனாட்டம் ஹேங் ஆன மனசு, ஐஃபோன் மாதிரி தெறிக்கும்.

6) கை,கால நீட்டுங்க:

உடனே, ஜிம்முக்கான்னு கடுப்பாவாதீங்க. உங்க பெட்லயே செய்யலாம். இல்லைன்னா இறங்கி பக்கத்துல நின்னு செய்யலாம். துவைச்ச துணிய அயர்ன் பண்னலன்னா, நேராக்கா மாட்டோமா? அந்த மாதிரி உங்க உடம்பா கொஞ்ச ஸ்ட்ரெட்ச் பண்ணுங்க. போதும். ஒரு சின்ன சோம்பல் முறிச்சாலே 1000 வாட்ஸ் பல்பு எரியுதே.. கொஞ்சம் எக்ஸ்ட்ரா முறிச்சா???

7) ஈவ்னிங் என்ன பிளான்?

நாள் முழுக்க வேலை வேலைன்னு ஓடப் போறீங்க? நதியெல்லாம் கடல்ல தானே சேருன்ற மாதிரி, மாலையை தேடித்தானே எல்லாரும் ஓடுறோம்? சோ, காலைலயே மாலை என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணுங்க. அது வெறும் ஃப்ரெண்டுக்கா இல்ல கேர்ள் ஃப்ரெண்டுக்கா… அப்பா அம்மாவுக்கா இல்ல அம்மன் கோவிலுக்கா… மெகா சீரியலுக்கா இல்ல மெகா மாலுக்கா… முடிவு பண்ணிடுங்க.
இப்படி பிளான் பண்ணிப் பாருங்க. இன்றைய நாள் நல்லபடியா போகும். அப்படி நடந்ததும் நைட்டு வீட்டுக்கு வந்து, இந்தப் பதிவை நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க. ஏன்னா, ஷேரிங் நல்லது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *