ஈரானில் கெத்து காட்டிய விஜய் ரசிகர்கள்

நடிகர் விஜய்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் குவிந்துள்ள நிலையில் ஈரான் விஜய் ரசிகர்கள் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஈரானில் உள்ள ஜிம் ஒன்றில் பயிற்சியின் போது விஜய் ரசிகர்கள் நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அப்படி அந்த வீடியோ வைரலாக காரணம் அவர்கள் விஜய்யின் பாடலுக்கு நடனமாடியதே. விஜய் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான போக்கிரி படம். அந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தன. குறிப்பாக ’மாம்பழமா மாம்பழம்’ என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த பாடலுக்கு தான் ஜிம்மில் அவர்கள் நடனமாடி அதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply