இவ்வளவு சொன்ன ரஞ்சித் அதை மட்டும் ஏன் சொல்லலை?

இவ்வளவு சொன்ன ரஞ்சித் அதை மட்டும் ஏன் சொல்லலை?

சமீபத்தில் திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி, இட ஒதுக்கீடு என்பது திமுக போட்ட பிச்சை என்று பேசியதற்கு இயக்குனர் பா.ரஞ்சித் தனது டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

பார்ப்பனிய வர்ண அடுக்குகளுக்கு எதிராக அயோத்திதாசர் தொடங்கிய திராவிட, தமிழ் உணர்வின் தொடர்ச்சியில் பெரியாரும் முன்னெடுத்த சாதி எதிர்ப்பு திராவிட கொள்கைகளால் ஆட்சிக்கு வந்த பலர் இன்று பெரியாரையும் மறந்து(மறுத்து) விட்டார்கள் என்பதையே சமீபத்திய நிகழ்வுகள் நமக்கு உணர்ந்துகின்றன

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்ன வள்ளுவன் தொடங்கி அயோத்தி தாசர், ரெட்டைமலை சீனிவாசன், எல்.சி குருசாமி, எம்.சி ராஜா,புரட்சியாளர் அம்பேத்கர், சிவராஜ், மீனாம்பாள், சத்தியவாணிமுத்து இன்னும் எத்தனை எத்தனையோ பெயர் தெரியாத போராளிகளின் உழைப்பின் பயனாக பெற்ற உரிமையை அவர்களின் போராட்ட வரலாற்றை மறுத்து பிச்சை என்று சொல்லும் சிந்தனையிலிருந்து வெளியே வாருங்கள். பெரியார் பார்வையை மறந்து விட்ட உங்களுக்கு அவரிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. முன்னோடிகளை படமாக ஆக்கி அஞ்சலி செலுத்துவதை விட , முதலில் அவர்களை கருத்தில் இருத்த பழகுங்கள். என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் இவ்வளவு பேசிய பா.ரஞ்சித், திமுகவையோ, திமுக எம்பியையோ, அவர் பெரிதும் மதிக்கும் திருமாவளவன் ஏன் கண்டிக்கவில்லை என ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தது குறித்தும் சொல்லியிருக்கலாம் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.