இவர் ஒரு கலப்படமற்ற இந்து விரோதி:

வைகோ குறித்து எச்.ராஜா

பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே

பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்தனர்

இதுகுறித்து வைகோ கூறியபோது ’பெரியார் சிலை அவமதிப்பு செய்தி கேட்டு துடித்துப் போனேன் என்றும் இந்த அநியாய செயல் என்றும் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்திருந்தார்
இதுகுறித்து பாஜக தேசிய தலைவர் ராஜா கூறியபோது ’கந்த சஷ்டி கவசத்தை ஈவேரா கும்பல் அவமதித்த போது ஏன் இவர் துடிக்கவில்லை என்றும் இவர் ஒரு கலப்படமற்ற இந்து விரோதி என்ற காரணத்தினால்தான்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். வைகோவின் பெரியார் கண்டனமும் எச்.ராஜா கொடுத்த பதிலடியும் தற்போது வைரலாகி வருகிறது

Leave a Reply

Your email address will not be published.