இவர்தான் மாணவர்களின் கதாநாயகி: சைலேந்திரபாபுவின் அசத்தல் டுவீட்

நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பாதிப்படைவதாகவும், ஏழை எளியவர்களின் மருத்துவ கனவு கானல் நீராகி போவதாகவும் ஒருபக்கம் அரசியல்வாதிகள் கருத்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திரபாபு தனது டுவிட்டரில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அனக்காபுத்தூர் அரசு பள்ளியில் படித்த ஜீவிதா, ஒரு ஆண்டு நீட் தேர்வுக்கான பயிற்சி எடுத்தார். 605 மதிப்பெண்களுடன் இன்று அவர் விரும்பும் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர உள்ளார். இவர்தான் மாணவர்களின் கதாநாயகி என்று கூறியுள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை விடுத்து நீட் தேர்வுக்கான பயிற்சியில் முறையாக ஈடுபட்டால் மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகிவிடும் என்பதற்கு இந்த மாணவி ஒரு சாட்சி

 

Leave a Reply