இவர்தான் உண்மையான ‘மாஸ்டர்’: குவியும் பாராட்டுக்கள்

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் குட்டிக்கதை பாடல் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பாடலுக்கு பல்வேறு வகையில் விமர்சனம் வந்தாலும் இந்த பாடலுக்கான அனிமேஷன் காட்சிகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது

குறிப்பாக குழந்தைகள் மற்றும் மாணவ மாணவிகள் இந்த கிராபிக்ஸ் காட்சிகளை ரசித்து பார்ப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் பாடல்வரிகளுக்கேற் அனிமேஷன் காட்சிகளை படம் வரைந்து செய்தவர் மாஸ்டர் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் உதவியாளர் யோகி என்பது தெரியவந்துள்ளது

இந்த தகவலை இயக்குனர் ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து தெரிவித்ததை அடுத்து உண்மையான மாஸ்டராகிய யோகிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply