இவர்தான் உண்மையான சிங்கப்பெண்: வைரலாகும் வீடியோ

இவர்தான் உண்மையான சிங்கப்பெண்: வைரலாகும் வீடியோ

‘பிகில்’ திரைப்படம் வெளியானதில் இருந்தே வீரமான பெண்களையும், சாதனை செய்யும் பெண்களையும் ‘சிங்கப்பெண்’ என்று கூறி வருவது வழக்கமாகி உள்ளது

இந்த நிலையில் பெட்ரோல் பங்க் ஒன்றில் திடீரென ஒரு வாகனம் தீப்பிடித்து எரிகிறது. அந்த வண்டியின் உரிமையாளர் அலறியடித்து கொண்டு ஓடுகிறார். அதன் அருகில் இருப்பவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள ஓடுகின்றனர். அவரவர் தங்களுடைய வாகனத்தை பாதுகாகும் முயற்சியில் உள்ளனர்.

ஆனால் அந்த பெட்ரோல் பங்கில் பணிபுரியும் பெண் ஒருவர் தனது உயிரையும் பொருட்படுத்தாது அருகில் இருந்த தீயணைப்பு இயந்திரத்தை எடுத்து அந்த வாகனத்தில் எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்கின்றார். இந்த சிங்கப்பெண்ணின் செயல் குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

https://twitter.com/VijayThambi05/status/1232256090353438720

Leave a Reply

Your email address will not be published.