இளம்பெண்ணை சவுக்கால் அடித்த பூசாரி! வைரலாகும் வீடியோ

பூசாரி ஒருவர் இளம்பெண் ஒருவரை சவுக்கால் அடிக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருவதை அடுத்து அந்த பூசாரியிடம் போலீசார் விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், ஆபானி என்கிற இடத்தில் அமைந்துள்ளது மாரிகாம்பா அம்மன் கோவில். இங்கு பூசாரியாக இருக்கும் மல்லிகார்ஜுன் என்பவர், ஒரு பெண்ணுக்கு பேய் ஓட்டுவதாகக்கூறி சரமாரியாக சவுக்கால் அடிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நூற்றாண்டிலும் பேய் ஓட்டுவதாக கூறி ஏமாற்றும் பூசாரிகளிடம் பொதுமக்கள் சென்று கொண்டிருப்பதையும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். எந்த பிரச்சனைக்கும் மருத்துவத்தில் தீர்வு இருக்கும் நிலையில் பூசாரிகளை தேடி செல்வது ஏன்? என்ற கேள்வியும் எழுகின்றது

Leave a Reply