இளநிலை, முதுநிலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: பாரதிதாசன் பல்கலை அறிவிப்பு

2021-2022 கல்வியாண்டுக்கான இளநிலை, முதுநிலை, டிப்ளமோ படிப்புகளுக்கு சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என பாரதிதாசன் பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது

இளநிலை படிப்பில் சேர பிளஸ் டூ மதிப்பெண் வெளியான 15 நாட்களில் விண்ணப்பிக்கலாம் என்றும்,
முதுநிலை டிப்ளமோ படிப்புகளில் சேர வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பாரதிதாசன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது

அனைத்து படிப்புகளுக்கும் www.bdu.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என பாரதிதாசன் பல்கலைக் கழக பதிவாளர் கோபிநாத் அவர்கள் தெரிவித்துள்ளார்.