இலங்கை குண்டுவெடிப்பு: பலியான 207 பேர்களில் 3 பேர் இந்தியர்கள்

இலங்கை குண்டுவெடிப்பு: பலியான 207 பேர்களில் 3 பேர் இந்தியர்கள்

இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் அடுத்தடுத்த நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் இதுவரை 207 பேர் பலியுள்ளதாகவும், 500 -க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் பலியாகியிருப்பதாகவும், இலங்கை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் கொழும்புவில் உள்ள தூதரகத்தை அணுகலாம் என்றும் தேவைப்பட்டால் மருத்துவக்குழுக்களையும் அனுப்ப தயாராக உள்ளதாகவும் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் பலியான 3 இந்தியர்கள் லஷ்மி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ் என்றும் அமைச்சர் – சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்துள்ளார்.

Leave a Reply