இலங்கை-ஆப்கானிஸ்தான் ஆட்டம் மழையால் பாதிப்பு

இலங்கை-ஆப்கானிஸ்தான் ஆட்டம் மழையால் பாதிப்பு

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நிலையில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 33 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 182 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த நிலையில் மைதானத்தில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இலங்கை அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் கருனரத்னே 30 ரன்களில் ஆட்டமிழக்க அதன்பின் களமிறங்கிய திரமினே, மெண்டிஸ், மாத்யூஸ், டெசில்வா மற்றும் NLTC பெரரே ஆகியோர் சொற்ப ரன்களில் தங்கள் விக்கெட்டுக்களை பறி கொடுத்தனர். MDKJ பெரரே மட்டும் ஓரளவுக்கு நிலைத்து ஆடி 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Leave a Reply