இரும்பு தொழிற்சாலையில் விபத்து: காஞ்சிபுரம் அருகே 3 பேர் பலி

இரும்பு தொழிற்சாலையில் விபத்து: காஞ்சிபுரம் அருகே 3 பேர் பலி

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே இரும்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் படுகாயமடைந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்த தொழிலாளர்கள் 3 பேரும் ஜக்‌சி, அகிலேஷ், சுரேந்தர் என்பதும் இவர்கள் மூவரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த இரும்பு தொழிற்சாலையில் இரும்பு உலை வெடித்தததால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், இந்த விபத்தில் மேலும் 8 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது

Leave a Reply