இருமல் மருந்து குடித்த 9 குழந்தைகள் மரணம்: பெரும் பரபரப்பு

இருமல் மருந்து குடித்த 9 குழந்தைகள் மரணம்: பெரும் பரபரப்பு

இருமல் மருந்து குடித்த 9 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் ஜம்மு காஷ்மீரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில் சர்ச்சைக்குரிய இருமல் மருந்தை தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் திருப்பி அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த மருந்தில் விஷத்தன்மை இருந்ததாகவும், இதுபற்றி ஆரம்பத்திலேயே கண்டறியப்படாதது ஏன் என்பதும் விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் சர்ச்சைக்குரிய இருமல் மருந்து விற்கப்பட்டுள்ளதாகவும், இந்த மருந்துக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் உடனடியாக இந்த மருந்துகள் தமிழகத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

Leave a Reply