‘இராமாயணம்’ படத்தில் ராமர் – சீதை கேரக்டர்களில் ஹிருத்திக்-தீபிகா?

ரூ.500 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகவிருக்கும் ‘இராமாயணம்’ திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ராமர் மற்றும் சீதை கேரக்டர்களில் நடிக்க ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோனே நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

மேலும் இந்த படத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் நடிக்கவிருப்பதாகவும் இந்த படத்தின் அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரும் என்றும் தெரிகிறது

3D தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்த படம் மூன்று பாகங்களாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது

Leave a Reply