இரண்டு மணி நேரத்தில் இரு பெண்களுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை

நாமக்கல் அருகே ஒரு மணமகன் இரண்டு மணி நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு பெண்களுக்கு ஒரே மேடையில் தாலி கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விஜி என்ற மணமகனுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணிற்கும் பெரியோர்கள் திருமணம் நிச்சயம் செய்து திருமணத்தை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் பெரியோர்களின் ஆசியில் மணமகள் கழுத்தில் மணமகள் தாலி கட்டினார். ஆனால் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. திடீரென மணமகள் எழுந்து தாலியை கழட்டி தூக்கி எறிந்துவிட்டு கோபமாக மணமேடையில் இருந்து வெளியே சென்றுவிட்டார்.

இதனால் மணமகனும் அவருடைய உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின்னர் மணமகள் வீட்டில் விசாரித்தபோது மணப்பெண்ணுக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அதனை மறைத்து திருமண ஏற்பாடு செய்ததாகவும் கூறினர்.

இந்த நிலையில் அதே மேடையில் மணமகனுக்கு வேறொரு உறவினர் பெண்ணை முடிவு செய்து அவருடைய பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். இரண்டு மணி நேர இடைவெளியில் மீண்டும் ஒரு பெண்ணுக்கு மணமகன் தாலி கட்டினார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *