இரண்டு சார் கருவூல அலுவலகக் கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திருப்போரூர் மற்றும் சின்ன சேலத்தில் ரூ.2.11 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இரண்டு சார் கருவூல அலுவலகக் கட்டிடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (4.8.2022) தலைமைச் செயலகத்தில், நிதித்துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம்,  திருப்போரூரில் 1 கோடியே 11 இலட்சத்து  65 ஆயிரம் ரூபாய் செலவிலும், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலத்தில் 1 கோடியே 4 ஆயிரத்து 606 ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள சார் கருவூல அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்தார்.