இரண்டு ஆளுமைகள் இல்லாத தேர்தல் என்பதால் கணிக்க முடியவில்லை: தமிழிசை

இரண்டு ஆளுமைகள் இல்லாத தேர்தல் என்பதால் கணிக்க முடியவில்லை: தமிழிசை

தமிழகத்தில் இரண்டு ஆளுமைகளின் மறைவுக்கு பின் நடைபெற்ற தேர்தல் என்பதால் தேர்தல் களத்தை கணிக்க முடியாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இருப்பினும், மக்கள் ஆதரவு அதிமுக-பாஜக கூட்டணிக்கு இருப்பதால் தன்னுடைய வெற்றி உறுதி என்று அவர் கூறினார்.

மேலும் எந்த ஊழல் வழக்கிலும் நான் சிறை செல்லவில்லை என்று கனிமொழியை மறைமுகமாக சுட்டிக்காட்டிய தமிழிசை, நான் நிச்சயம் தூத்துக்குடியில் வெற்றி பெறுவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.