shadow

பிரபல பாடலாசிரியர் மற்றும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி காலமானார் இதனையடுத்து அவரது குடும்பத்தினருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

கனா என்ற திரைப்படத்தை இயக்கியவரும் பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியவருமான அருண்ராஜா காமராஜரின் மனைவி சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த சில மணி நேரங்களுக்கு முன் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது

இதனால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்தநிலையில் திரையுலகினர் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.