இயக்குனர் சங்க தேர்தல் தேதியில் திடீர் மாற்றம்

இயக்குனர் சங்க தேர்தல் தேதியில் திடீர் மாற்றம்

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் தேர்தல் ஜூலை 14ஆம் தேதி தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்கு பதிலாக ஜூலை 21 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது

இயக்குனர் சங்க தலைவராக பாரதிராஜா போட்டியின்றி தேர்வு பெற்றாலும் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதால் இந்த தேர்தலில் ஒரு தலைவர்,  2 துணைத் தலைவர்கள், 1 பொதுச் செயலாளர், 1 பொருளாளர்,  4 இணைச்செயலாளர்கள் மற்றும்  12 செயற்குழு உறுப்பினர்கள்  தேர்வு செய்யப்படுவர்

இயக்குனர் சங்க தலைவர் பதவிக்கு மீண்டும் பாரதிராஜா போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. மேலும் அவருடைய ஆதரவாளர்கள் மற்ற பதவிகளுக்கு போட்டியிடுவர் என தெரிகிறது

Leave a Reply