இயக்குனர் சங்க தேர்தல்: அமீர், ஜனநாதன் விண்ணப்பங்கள் நிராகரிப்பு ஏன்?


தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் தலைவர் தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு இயக்குனர்கள் பி.வாசு , ஜனநாதன், கே. எஸ்.ரவிக்குமார், அமீர் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் இயக்குனர் அமீரின் விண்ணப்பம் மற்றும் இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் தாக்கல் செய்த விண்ணப்பம் ஆகியவை நிராகரிக்கப்பட்டன. சங்க விதிகளுக்கு முரணாக இந்த இரு விண்ணப்பங்களும் இருந்ததால் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது

எனவே இப்போதைக்கு பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார் ஆகிய இருவர் மட்டுமே தலைவர் பதவிக்கான போட்டியில் உள்ளனர் என்பதும், வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வரும் 13ஆம் தேதி வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply