இம்ரான்கான் பேட்டியை படித்து பார்க்க நேரமில்லை: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

இம்ரான்கான் பேட்டியை படித்து பார்க்க நேரமில்லை: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

காஷ்மீருக்காக இந்தியா பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர் வெடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சமீபத்தில் பேட்டி அளித்த நிலையில் அவருடைய பேட்டியை படித்து பார்க்க எல்லம் எனக்கு நேரமில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் இம்ரான்கானுக்கு இந்தியாவை பற்றி இன்னும் தெரியவில்லை என்றும், இந்து தேசத்திற்காக சிறப்பு அந்தஸ்து நீக்கம் என்ற இம்ரான்கான் கருத்தை தான் மறுப்பதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

மேலும் காஷ்மீரில் தீவிரவாத செயல்பாடுகளை தடுத்து நிறுத்தவே தகவல் தொடர்பை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பும் என்றும் அவர் கூறினார்

Leave a Reply