இப்படி ஏமாத்திட்டிங்களே அனிருத்: ’குட்டிக்கதை’ குறித்து நெட்டிசன்கள் புலம்பல்

இப்படி ஏமாத்திட்டிங்களே அனிருத்: ’குட்டிக்கதை’ குறித்து நெட்டிசன்கள் புலம்பல்

’மாஸ்டர்’ படத்திற்காக தளபதி விஜய் பாடிய ஒரு குட்டி கதை பாடல் சற்றுமுன் வெளியாகியது. பொதுவாக ஆடியோ விழாவில் தான் விஜய் குட்டி கதை சொல்வார். ஆனால் தற்போது பாடலில் ஒரு குட்டி கதை சொல்ல போகிறார் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்த பாடலுக்கு ஏற்பட்டது

ஆனால் இந்த பாடலில் குட்டி கதை சொல்றேன் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார், கடைசி வரை அவர் எந்த குட்டிக்கதையையும் சொல்லவே இல்லை. ஆங்கிலம் கலந்த தமிழ் வார்த்தைகளில் அறிவுரைகள் மட்டுமே ரசிகர்களுக்கு அவர் சொல்லியிருக்கிறார். இந்த பாடல் விஜய் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இருந்தாலும் மற்ற ரசிகர்களை கவரவில்லை போல் தெரிகிறது

ஆளப்போறான் தமிழன்’ போல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் ஒரு பாடலை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மிகவும் மெதுவாக நகரும் ஒரு ஸ்லோ பாடலை கேட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த பாடல் குழந்தைகளை மிக அதிகம் கவரும் என்றும் இளைஞர்கள் இந்த பாடல் ஒரு உந்துதலாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது

Leave a Reply