இப்படியெல்லாம் பணத்தை கடத்த முடியுமா? ஒரு அதிசய கடத்தல்காரன்

வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கும், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு பல்வேறு வகையில் நூதனமான முறையில் பணம் பொருள் மற்றும் தங்கங்களை கடத்தி வருவது குறித்த செய்திகள் அவ்வபோது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் வெளிநாட்டு பணத்தை நூதனமான முறையில் கடத்திய ஒருவரை இன்று போலீசார் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர். நாம் அன்றாடம் சாப்பிடும் வேர்க்கடலையில் உள்ளே சிறிய அளவில் சுருட்டி மறைக்கப்பட்டு வெளிநாட்டு கரன்சி கடத்தப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இவ்வளவு நுட்பமாக வெளிநாட்டு கரன்சியை சிறிய அளவில் மடித்து அதனை ஒரு நூலால் கட்டி வேர்க்கடலைக்குள் ஒளித்து வைத்து நூதனமாக கடத்தப்பட்டிருப்பதை பார்த்து விமான நிலைய அதிகாரிகளே வியந்துள்ளனர். என்னதான் மூளையுடன் செயல்பட்டு கடத்தினாலும் பிடிப்பட்டால் சிறைதான் என்ற நிலையில் தற்போது அந்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்

Leave a Reply