இப்படியெல்லாமா எழுதுவிங்க! ‘போயஸ் கார்டன்’ செய்திக்கு மறுப்பு தெரிவித்த ஜெயம் ரவி

இப்படியெல்லாமா எழுதுவிங்க! ‘போயஸ் கார்டன்’ செய்திக்கு மறுப்பு தெரிவித்த ஜெயம் ரவி

கடந்த இரண்டு நாட்களாக ஜெயம் ரவி குறித்த செய்தி ஒன்று கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் பரவி வருகிறது. ஒரு முன்னணி திரைப்பட நிறுவனத்திற்கு மூன்று படங்கள் நடித்து கொடுக்க ஜெயம் ரவி ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இந்த மூன்று படங்களுக்கான சம்பளத்திற்கு பதில் தயாரிப்பாளரின் போயஸ் கார்டன் வீட்டை அவர் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜெயலலிதா, ரஜினியை அடுத்து போயஸ் கார்டனில் ஜெயம் ரவியும் வீடு வாங்கிவிட்டதாக செய்தி பரவியது

இந்த செய்தி முற்றிலும் வதந்தி என்றும், ஒரு செய்தியை வெளியிடும் முன் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒரு வார்த்தை விளக்கம் கேட்டிருக்கலாம் என்றும் ஜெயம் ரவி தனது அதிருப்தியை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஒருவழியாக போயஸ்கார்டன் செய்தி பொய்ச்செய்தியாகிவிட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது

‘அடங்கமறு’ வெற்றிக்கு பின் தற்போது ‘கோமாளி’ படத்தில் நடித்து வரும் ஜெயம் ரவி, அடுத்ததாக தனது சகோதரர் மோகன்ராஜா இயக்கத்தில் உருவாகும் ‘தனி ஒருவன் 2’ படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் பிசியாக இருக்கும் மோகன்ராஜா வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் படப்பிடிப்பை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply