இன்றைய ராசிபலன்கள் 24.09.2019

மேஷம்:
இன்று எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். ஏற்கனவே செய்த ஒரு செயலை நினைத்து வருந்த நேரிடும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். எடுத்துக் கொண்ட முயற்சிகளில் காரிய தடை தாமதம் ஏற்படலாம். உஷ்ண சம்பந்தமான நோய் ஏற்படுத்தும். வீண்பயம் ஏற்படும். ஏற்கனவே செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும். சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியம் பெறும். வீண் அலைச்சல் ஏற்படலாம். சில நேரங்களில் நிர்பந்தத்தின் பேரில் விருப்பமில்லாத வேலை செய்ய நேரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

ரிஷபம்:
இன்று வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம். சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். எதிர்பாலினத்தாருடன் பழகும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் பார்ட்னர் விவகாரங்களில் கவனம் தேவை. ஆர்டர்கள் கிடைப்பது திட்டமிட்டபடி இல்லாமல் தாமதமாகும். வேலையாட்களிடம் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நினைத்தபடி பணிகளை செய்ய முடியாத நிலை உருவாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

மிதுனம்:
இன்று பார்ட்னர்களுடன் சேர்ந்து தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. கடன் தொல்லை தலைதூக்கலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை, இடமாற்றம், அலைச்சல் போன்றவை இருக்கக்கூடும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் திடீர் மனஸ்தாபங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே கருத்துவேற்றுமை ஏற்படும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நன்மை தரும். மனதடுமாற்றம் உண்டாகலாம். செலவு கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6

கடகம்:
இன்று எல்லா வகையிலும் லாபம் கிடைக்கும். வாக்கு வன்மையால் எதுவும் சாதகமாக நடக்கும். நல்ல சிந்தனை உண்டாகும். அறிவுதிறன் அதிகரிக்கும். சில நேரங்களில் மற்றவர்கள் பேசுவதை தவறாக புரிந்து கொள்ள நேரிடும், மனோ தைரியம் அதிகரிக்கும். தடைபட்டிருந்த பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. எதிலும் தேவையற்ற வீண் கவலை உண்டாகும். பயணங்கள் செல்ல நேரிடலாம். கடன் விஷயங்களில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

சிம்மம்:
இன்று எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். போட்டிகள் குறையும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். தொழில் ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். மேல் அதிகாரிகள் கூறியபடி காரியங்களை செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

கன்னி:
இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும் உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். நல்ல சிந்தனை ஏற்படும். மனோ பலம் அதிகரிக்கும். சாதூரியமான பேச்சால் எளிதாக எதையும் செய்து முடிப்பீர்கள். மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். மேலிடம் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர் போல் இருப்பார்கள். எனவே எல்லோரையும் அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். நினைத்த காரியத்தை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் மனக்கவலை உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

துலாம்:
இன்று தைரியம் அதிகரிக்கும். ஜீரண கோளாறுகள் ஏற்படலாம். பணம் பல வழிகளிலும் செலவாகும். காரியதாமதம் ஏற்படும். அடுத்தவர்களுக்காக எந்த உத்தரவாதமும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வீண் மனக்கவலை நீங்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் அவசியம். நண்பர்கள் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் தாமதப்படும்.புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். பணதேவை உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் அவப்பெயர் உண்டாகலாம். பயணங்கள் மூலம் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். திடீர் மன குழப்பத்தை ஏற்படுத்தும். முக்கிய முடிவு எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

விருச்சிகம்:
இன்று குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் கணவன்மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதும் நல்லது. சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எச்சரிக்கை தேவை. அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. செலவு அதிகரிக்கும். வீண் கவலை உண்டாகலாம்.தொழில், வியாபாரம் பற்றிய கவலை உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். வேலை மாறுதல் பற்றிய எண்ணம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

தனுசு:
இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலையும், வேலை பளுவையும் சந்திக்க நேரிடும். சிலருக்கு இட மாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள்
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மகரம்:
இன்று பண தேவை அதிகரிக்கும். சோம்பேறிதனத்தை விட்டுவிட்டு நன்கு உழைப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். அறிவுதிறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும். ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள். .எதிலும் உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். வேலை பளு அதிகரிக்கும். எல்லா காரியங்களும் அனுகூலமாகும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தைரியம் கூடும். சுய நம்பிக்கை உண்டாகும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர் பாராத திருப்பங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கும்பம்:
இன்று மனதில் தைரியம் பிறக்கும். வாக்கு வன்மையால் ஆதாயத்தை பெற்று தரும். உயர்மட்ட பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும். உங்கள் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். மனதில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்ற வாய்ப்புகள் எதிரில் வந்து தோன்றும். வியாபாரம் தொடர்பான செலவு வார இறுதியில் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

மீனம்:
இன்று வீண் அலைச்சல் இருக்கும். மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். பகைகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து தாராளமாக இருக்கும். கையிருப்பு கூடும். இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும். நீண்ட தூரப் பயணங்களால் லாபம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர் மீண்டும் வந்து சேரலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். உறவினர் மத்தியில் மரியாதை கூடும். எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். திடீர் செலவு உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

Leave a Reply