இன்றைய ராசிபலன்கள் 11/12/2017

மேஷம் : செயல் திறன் மேம்படும். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். தாராள பணவரவு கிடைக்கும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பெருகும். பணியாளர் களுக்கு சலுகை கிடைக்கும்.

ரிஷபம் : நண்பர் மேல் அக்கறை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை ஏற்படும். திட்டமிட்டு செலவு செய்வது நல்லது. சுற்றுப்புற தொந்தரவினால் நித்திரை தாம தமாகலாம். போக்குவரத்தில் கவனம் தேவை.

மிதுனம்: சமூக நிகழ்வு மனதை பாதிக்கலாம். தொழில், வியாபார குளறுபடியை தாமதமின்றி சரி செய்யவும். அளவான பணவரவு கிடைக்கும். தியானம், வழிபாடு நம்பிக்கை தரும். இயந் திரப்பிரிவு பணியாளர்கள் பாதுகாப்பில் கவனம் வேண்டும்.

கடகம் : பணிகளை சுறுசுறுப்பாக நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க வாய்ப்பு உருவாகும். ஆதாய பண வருமானம் கிடைக்கும். விரும்பிய பொருட்கள் வாங்குவீர்கள். குடும் பத்தினருடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.

சிம்மம் : பணி நிறைவேற கூடுதல் முயற்சி அவசியம். தொழில், வியாபார வளர்ச்சி சுமாரான அளவில் இருக்கும். அவசியம் அறிந்து செலவு செய்யவும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

கன்னி : குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரம் திருப்திகரமாகும். தாராள பணவரவு கிடைக்கும். மாணவர்கள் பொறுப்புணர்வுடன் படித்து பாராட்டு பெறுவர். வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள்.

துலாம் : விட்டுக் கொடுத்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபார நடைமுறை சுமாரான அளவில் இருக்கும். பணவரவு கிடைப்பதில் தாமதம் இருக்கும். குடும்ப தேவை ஓரளவு நிறை வேறும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை.

விருச்சிகம் : செயலில் புத்துணர்வு அதிகரிக்கும். தொழில், வியாபார நடைமுறை திருப்திக ரமாகும். ஆதாய பண வரவு கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். மாணவர்க ளுக்கு ஞாபகத்திறன் வளரும்.

தனுசு :உறவினர்களிடம் அதிக அன்பு கொள்வீர்கள். உங்களின் மதிப்பு உயரும். தொழில் வியாபாரம் செழிக்க வாய்ப்பு உருவாகும். உபரி வருமானம் கிடைக்கும். குடும்பத் தேவை தாராள பணச்செலவில் நிறைவேறும்.

மகரம் : வேலைப்பளு சஞ்சலம் தரும். நண்பரின் ஆலோசனை நம்பிக்கை தரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி சீராக இருக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் மாற்றம் ஏற்படலாம்.

கும்பம் : நினைத்த காரியம் நிறைவேற தாமதமாகலாம். நல்லோரின் ஆலோசனை நன்மை பெற உதவும். தொழில், வியாபாரத்தில் இலக்கு கால அவகாசத்தில் நிறைவேறும். பணப்பரிவர்த் தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். நேரத்திற்கு உண்பது நல்லது.

மீனம் : ஞாபக சக்தி அதிகரிக்கும். சிரமம் வெல்லும் வழி அறிவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சிப் பணி இனிதாக நிறைவேறும். உபரி வருமானம் கிடைக்கும். அன்புக்கு உரியவர் பரிசுப்பொருள் தருவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *