இன்றைய போட்டியில் மீண்டும் கேதார் ஜாதவ்? அதிர்ச்சி தகவல்

சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே கடந்த 7ஆம் தேதி நடந்த போட்டியில் சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதற்கு சென்னை அணியின் கேதார் ஜாதவ் தான் காரணம் என்று சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது

இன்றைய போட்டியிலும் கேதார் ஜாதவ் அணியில் இடம் பெறுவார் என செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதால் சென்னை ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

ஜாதவ்வை அணியில் இருந்து தூக்க வேண்டும் என சென்னை அணியின் ரசிகர்கள் ஏராளமானோர் கோரிக்கை விடுத்தும் அந்த கோரிக்கை காற்றில் பறக்கவிடப்பட்டு மீண்டும் அணியில் சேர்த்துள்ளதாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply