பரபரப்பு தகவல்

கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட சூரிய கிரகணத்தை அடுத்தே கொரோனா வைரஸ் உலகில் பரவ தொடங்கியதாகவும், இதனையடுத்து இன்றைய சூரிய கிரகணத்தில் அந்த கொரோனா வைரஸ் கொல்லப்படும் என சிலர் தங்களது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை நிகழக்கூடிய கங்கண சூரிய கிரகணத்தின் போது நிச்சயம் உலகிலுள்ள கொரோனா வைரஸ் கொல்லப்படும் என்று ஒரு சில பத்திரிகைகளிலும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த செய்தி உண்மையா என்பதை இன்று மாலை வரை பொறுத்திருந்து பார்ப்போம். அதேபோல் ஜூன் 21ஆம் தேதியுடன் உலகம் அழிந்துவிடும் என்று மாயன் காலண்டரில் கூறப்பட்டிருப்பதாகவும் ஒரு வதந்தி

கொரோனா அழியுமா? உலகம் அழியுமா? அல்லது இரண்டுமே வதந்தியா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply