இன்று 13 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இன்று மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது

மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 13 மாவட்டங்கள் பின்வருவன: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கன்னியாக்குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ஈரோடு, சேலம், மதுரை, விருதுநகா், தருமபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது