இன்று வரும் அனைவருக்கும் அத்திவரதர் தரிசனம் உண்டு: காஞ்சிபுரம் கலெக்டர்

காஞ்சிபுரத்தில் கடந்த ஒன்றரை மாதங்களாக பக்தர்களுக்கு காட்சி அளித்து வரும் அத்திவரதர் இன்றுடன் தரிசனம் முடிக்கப்படுகிறார்.

இந்த நிலையில் இன்று வருகை தரும் அனைத்து பக்தர்களும் அத்திவரதரை தரிசிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், பக்தர்களின் வருகையை பொறுத்தே நடை சாத்தப்படும் என்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் நாளை மாலை அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் வைக்கப்படுவார் என்றும், இந்த 48 நாட்களில் காஞ்சிபுர மாவட்டத்தை சேர்ந்த அனைத்து துறையினரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர் என்றும் ஆட்சியர் பொன்னையா பாராட்டு தெரிவித்தார்.

Leave a Reply